search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாட்ஸ் ஆப்"

    • சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பொதுமக்கள் 72991 92194 என்ற செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாய்பிரனீத் பொறுப்பேற்று உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தளமான மாமல்லபுரத்தின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மாமல்லபுரத்தில் சட்ட விரோதமாக வெளிநாட்டு மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், ஆன்லைன் விபச்சாரம், உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் ஓ.எம்.ஆர், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கட்ட பஞ்சாயத்து செய்யும் ரவுடிகளை தனிப்படை மூலம் ரகசியமாக கண்காணித்து அவர்களை ஒழிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.

    மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் குறித்து, பொதுமக்கள் 72991 92194 என்ற செல்போன் எண்ணிற்கும், வாட்ஸ் ஆப் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் பெயர்கள் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவில் கடந்த மாதம் 37 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
    • இது அக்டோபர் மாதத்தை விட 60 சதவீதம் அதிகம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கியுள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு கடந்த ஆண்டு அமல்படுத்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக வலைதளங்கள், ஒவ்வொரு மாதமும் தங்களது பயனாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்து வருகின்றன.

    இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் 37.16 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    புகார்களைப் பெறுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை அடிப்படையில் 9 லட்சத்து 90 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபர் மாதம் முடக்கப்பட்ட வாட்ஸ் ஆப் கணக்குகளை விட 60 சதவீதம் அதிகம் ஆகும்.

    கடந்த அக்டோபரில் மொத்தம் 23.24 லட்சம் இந்திய கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கியதும், அதில் முன்னெச்சரிக்கை அடிப்படையில் 8.11 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    ×